பிறை தென்பட்டதா, ரம்ஜான் எப்போது? தலைமை ஹாஜி முக்கிய அறிவிப்பு!
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரம்ஜான்
ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரம்ஜான் மாதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், இன்று(ஏப்ரல் 9) பிறை தென்படாததால் வியாழக்கிழமை (ஏப்ரல் 11 ஆம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு
ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 10 (இன்று) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதை தெரியப்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.