முஸ்லீம் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை - அரசு அதிரடி அறிவிப்பு

Ramadan West Bengal Mamata Banerjee
By Thahir Apr 02, 2023 08:16 AM GMT
Report

முஸ்லீம் அரசு ஊழியர்களுக்கு ரம்ஜான் நோன்பு கால சலுகையாக பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதி வழங்கியுள்ளது.

முதலமைச்சர் அதிரடி உத்தரவு 

கடந்த வாரம் துவங்கிய ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருப்பது வழக்கம்.

சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை கடைப்பிடிக்கப்படும் நோன்பினால் பலரும் சோர்வடைவதால் தங்கள் அன்றாடப் பணியிலிருந்து முன்னதாகவே மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

muslim-govt-staff-special-order-mamata-banerjee

மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை முதலமைச்சர் மம்தா கடந்த மார்ச் 26-ல் ஏற்றார்.

மறுநாளே முஸ்லிம் அரசு ஊழியர்களுக்காக முதலமைச்சர் மம்தா தனது உத்தரவில் மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை வேலை நேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த உத்தரவு மாநில அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.