உங்க மார்பகம் சின்னதா இருக்கு; மோசமான கமெண்ட் - ரம்யா என்ன சொன்னார் தெரியுமா?
உடல் குறித்த மோசமான கமெண்ட்டிற்கு ரம்யா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜே ரம்யா
விஜேவாக இருந்து பல பிரபலங்களை பேட்டி கண்டு பிரபலமானவர் ரம்யா. முன்னணி படங்களின் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளையும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், சங்கத்தமிழன், கேம் ஓவர், ஆடை என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை.கணவரை விவாகரத்து செய்தார்.
சரியான பதிலடி
இந்நிலையில் அவரிடம் சமீபத்தில் அவரது உடல் குறித்து மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதற்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ள ரம்யா, தன்னுடைய தற்போதைய உடலமைப்பை பெற தான் மிகுதியான வொர்க் அவுட் செய்தேன்.
தற்போதுள்ள தன்னுடைய உடலமைப்பு குறித்து தான் மிகுந்த உற்சாகமாக உணர்கிறேன். அவ்வாறு கமெண்ட் செய்பவர்கள், தங்களின் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் யோசிக்க வேண்டும் நீங்கள் மட்டும் சிரித்தால் அது ஜோக் இல்லை.
ஒருவர் தன்னுடைய உடல் குறித்து நம்பிக்கை இல்லாததையே இதுபோன்ற விமர்சனங்கள் காட்டுகிறது. முன்னதாக இதுபோன்ற கமெண்ட்கள் குறித்து தான் மிகுந்த கவலை கொள்ளும் நபராக இருந்தேன். தற்போது அந்த மனநிலையை தான் கடந்து எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.