பானுப்பிரியாவை துரத்தி துரத்தி காதலித்த ரம்யா கிருஷ்ணன் கணவர் - பகீர் கிளப்பிய பிரபலம்!
ரம்யா கிருஷ்ணனின் கணவர் பானுப்பிரியாவை காதலித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து, பல படங்களில் அம்மன் வேடத்தில் அசத்தியுள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக ரசிகர்களை கவர்ந்தார்.
24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இனைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில்,ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சியின் மேல் அவருக்கு காதல் வந்ததைத் தொடர்ந்து, திருமணம் செய்துக்கொண்டார்.
அப்படியே சுவற்றில் வைத்து அழுத்தினார்; கால் உதறல் எடுத்துறுச்சு - பிரபல நடிகர் குறித்து ரம்யா கிருஷ்ணன்!
கணவரின் காதல்?
முன்னதாக, யூகிசேதுவுடன் திருமணம் நடந்து அது விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை பானுப்பிரியா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் ஆதர்ஷ் கௌசல் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்போது தான் இயக்குநர் கிருஷ்ண வம்சி, பானுப்பிரியாவை துரத்தி துரத்தி காதலிப்பதாக கூறி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்தார்.
ஆனால், அது நடக்கவில்லை என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.