அப்படியே சுவற்றில் வைத்து அழுத்தினார்; கால் உதறல் எடுத்துறுச்சு - பிரபல நடிகர் குறித்து ரம்யா கிருஷ்ணன்!
நடிகர் கமல்ஹாசன் குறித்த ஷூட்டிங் ஸ்பாட் தகவல்களை ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, பல படங்களில் அம்மன் வேடத்தில் அசத்தியுள்ளார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக ரசிகர்களை கவர்ந்தார். 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இனைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
பஞ்சதந்திரம்
இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது வசனமும் பேசிக்கொண்டு கமலஹாசனை நகர்த்தி சமாளிக்க கூடிய ஒரு சீனை எடுக்க வேண்டி இருந்தது.
அந்த சீனில் கமலஹாசன் என்னை சுவற்றில் வைத்து அழுத்தி செய்ய வேண்டிய செயல்களை பக்காவாக செய்து முடித்து விடுவார். ஆனால் எனக்கு கால் உதறல் எடுத்து விட்டது. கமல்ஹாசன் எவ்வளவு பெரிய லெஜன்ட் அவரிடம் எப்படி இந்த சீனில் நடிப்பது என்று தெரியாமல் திணறியபடி தான் அந்த சீனை நடித்து முடித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.