இளமையாக தோற்றத்திற்காக...53 வயதில் முகத்தில் plastic surgery செய்த ரம்யா கிருஷ்ணன்?
ரம்யா கிருஷ்ணன்
80-களின் பிற்பகுதியில் தனது சினிமா வாழ்வை துவங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்றும் பிஸியான நடிகை தான்.
தமிழ்.தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மொழி படங்களின் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து கதாநாயகியாக மட்டுமில்லாமல் சிறந்த நடிகையாகவும் தன்னை இந்திய திரைத்துறையில் நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
அதற்கு சிறந்த சான்று பாகுபலி படம். ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ஜெயிலர் படம் இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
2003-ஆம் ஆண்டு திருமண செய்து கொண்ட ரம்யாகிருஷ்ணன் திருமணத்திற்கு பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வருகின்றார்.
Plastic Surgery
தற்போது ரம்யா கிருஷ்ணனின் வயது 53 ஆகிறது. இருப்பினும் அவர், திரையில் அழகாக தோன்றுகிறார். இதற்காக அவர் பெறும் முயற்சிகளை மேற்கொள்வார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதே நேரத்தில், தற்போது அவரின் சமீபத்திய புகைப்படம் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது, முகத்தில் இருக்கும் தோற்றத்தை மாற்ற ரம்யா கிருஷ்ணன் plastic surgery அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்ற செய்திகள் வேகமெடுத்துள்ளன.
இருப்பினும் சிலர் அது ஏதாவது பில்டராக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதில், உண்மை எது என்ன என்பது வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.