21 வருஷமாகிடுச்சே ..! இப்போ விவகாரத்தா..? பட்டென சொன்ன ரம்யா கிருஷ்ணன்..!

Karthick
in பிரபலங்கள்Report this article
தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து முன்னணி துணை நடிகையாகவே நீடித்து வருகின்றார் ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணன்
80-களின் பிற்பகுதியில் தனது சினிமா வாழ்வை துவங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்றும் பிஸியான நடிகை தான். தமிழ்.தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மொழி படங்களின் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து கதாநாயகியாக மட்டுமில்லாமல் சிறந்த நடிகையாகவும் தன்னை இந்திய திரைத்துறையில் நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
அதற்கு சிறந்த சான்று பாகுபலி படம். ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ஜெயிலர் படம் இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். 2003-ஆம் ஆண்டு திருமண செய்து கொண்ட ரம்யாகிருஷ்ணன் திருமணத்திற்கு பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வருகின்றார்.
விவகாரத்தா..?
இந்நிலையில், தான் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் அவரது கணவர் கிரிஷ்ணவம்சிக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அல்லது தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பல செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
இந்த செய்திகள் குறித்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதனுக்கு பேசியுள்ளார். அவர் இது குறித்து பேசும் போது, ஒருமுறை அவரிடம் சென்று ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு விவாகரத்து நடந்துவிட்டதா என்று கேட்டதற்கு, லூசு மாதிரி பேசாதீங்க என்று சொல்லிவிட்டு சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video