ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்து? இதுதான் காரணம் - போட்டுடைத்த கணவர்!
ரம்யா கிருஷ்ணனை இயக்குநர் வம்சி விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, பல படங்களில் அம்மன் வேடத்தில் அசத்தியுள்ளார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக ரசிகர்களை கவர்ந்தார். 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இனைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
விவாகரத்து?
இதற்கிடையில்,ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சியின் மேல் அவருக்கு காதல் வந்ததைத் தொடர்ந்து, திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 1 மகன் உள்ளார். முன்னதாக, யூகிசேதுவுடன் திருமணம் நடந்து அது விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ம்யா கிருஷ்ணனுக்கும், கிருஷ்ண வம்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள கிருஷ்ண வம்சி, நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை. நாங்கள் விவாகரத்து பெறவில்லை.
வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவ்வளவு தான். இதற்கு போய் விவாகரத்தாகிவிட்டது என சொல்வது வேதனையாக இருக்கிறது.
வீட்டில் ரம்யா கிருஷ்ணன் ரொம்ப ஜாலியான ஆள். காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். நல்ல மனைவி, நல்ல அம்மா என தெரிவித்துள்ளார்.