மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான் - இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!
12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை
ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில், அப்போது மாணவி விலகி செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், மாணவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "கடந்த சில மாதங்களாக மாணவி ஷாலினியை பள்ளிக்குச் செல்லும்போதும், மீண்டும் வீடு திரும்பும்போதும் அவரை பின்தொடர்ந்து காதலிக்குமாறு கூறி வந்தேன்.
வீட்டை விட்டு வெளியே வந்துவிடு நாம் எங்கேயாவது சென்றுவிடலாம் என்று கூறினேன். ஷாலினியை நான் ஒருதலையாக தீவிரமாக காதலித்தேன். என்னுடைய நெஞ்சிலும் ஷாலினி என்று பச்சை குத்தியுள்ளேன். ஆனால், நான் படிக்க வேண்டும் என்றும், என்னை பின்தொடர வேண்டாம் என்றும் ஷாலினி கூறினாள்.
இளைஞர் வாக்குமூலம்
தொடர்ந்து காதல் தொல்லை செய்து வந்தால் பெற்றோர் மூலம் போலீஸில் புகார் அளித்துவிடுவேன் என்று கூறினாள். அவர் அவ்வாறு கூறியது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், மாணவி பள்ளி செல்லும்போது கத்தியால் குத்தி கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முனியராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 3 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, முனியராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.