அந்த நடிகரை கட்டிப்பிடித்த ரம்பா - கடுப்பாகி ரஜினிகாந்த் செய்த செயல்!

Rajinikanth Rambha Tamil Cinema
By Sumathi Jun 21, 2024 09:45 AM GMT
Report

ரஜினிகாந்த் செய்த குறும்புத்தனம் குறித்து ரம்பா மனம் திறந்துள்ளார்.

நடிகை ரம்பா

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்தார். 2010ல் பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

rajinikanth - rambha

இந்நிலையில் ரம்பா முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், ”அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது இந்தி நடிகர் சல்மான் கான் படத்தின் செட்டுக்கு வந்தார்.

வடக்கில், ஒருவரையொருவர் பார்த்து கொண்டால் அவர்களை கட்டி பிடிப்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அப்போதில் இருந்தே இருக்கிறது. நாங்கள் கட்டிப்பிடித்த போது, ​​ரஜினி சார் அதையெல்லாம் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தார்.

தமன்னாவுடன் நெருக்கத்தில் கணவர்; இப்போ இங்கயுமா? கடுப்பில் நடிகை ரம்பா!

தமன்னாவுடன் நெருக்கத்தில் கணவர்; இப்போ இங்கயுமா? கடுப்பில் நடிகை ரம்பா!

ரஜினிகாந்த் செயல்

பின்னர், சல்மான் கான் வெளியேறிய பிறகு, ரஜினி சார் கோபமாக இருந்தார். அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் என்ன செய்தேன் என்று யோசித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் என்னிடம் வந்து 'ஏன் இப்படி செய்தாய்?

அந்த நடிகரை கட்டிப்பிடித்த ரம்பா - கடுப்பாகி ரஜினிகாந்த் செய்த செயல்! | Rambha Says Rajinikanth Got Angry For Hug

ரஜினி சார் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்றார். என்னுடன் ரஜினி சார் நடிக்க மாட்டார் என்று சொன்னார் என கேட்டதும். நான் அழ ஆரம்பித்தேன். அப்போது ரஜினி சார் என்னிடம் விரைந்து வந்து ஆறுதல் கூறினார்.

அனைவரையும் செட்டில் அழைத்து வந்து வரிசையாக நிறுத்தி, 'அவர் சல்மான் கானை எப்படி வரவேற்றார்? அவள் எப்படி அவரிடம் ஓடினார்?' என செய்து காண்பித்தார். நான் அவரை அப்படி பார்த்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.