ராமாயண நாடகம்..பன்றியை கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகர் - அடுத்த நடந்த சமபவம்!
ராமாயண நாடகம் நடித்த நபர் பச்சையாக பன்றி இறைச்சியை சாப்பிட்டது அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
ராமாயணம்..
ஒடிசா, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரலாப் என்னும் பகுதியில் கடந்த வாரம் ராமாயண நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த நாடகத்தில் பேய் வேடத்தில் நடித்த நடித்த 45 வயதுடைய நடிகர் மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து
அதன் இறைச்சியை அப்படியே பச்சையாக சாப்பிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்றி இறைச்சி
இந்த நிலையில் நேற்று ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பாபுசிங் மற்றும் ஜனாதன் பிஜுலி ஆகியோர் பேசினர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் நாடக அமைப்பாளர்களில் ஒருவரான பின்பதர் கவுடா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.