எனக்கு வருத்தமே அது தான் - என்னோட !! நெகிழும் ராமராஜன்
ராமராஜன்
சினிமாவில் டாப் நடிகர்களை காட்டிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களை கட்டி போட்டு ஆட்சி செய்த கலைஞர்கள் அதிகம். அப்படி தமிழ் சினிமாவை கலக்கிய ஒரு நாயகன் ராமராஜன்.
இன்றளவும் கரகாட்டக்காரன் வெற்றி இவரின் புகழை சொல்கிறது என்றால், படம் வெளியான போது பெற்ற வெற்றியை யோசித்து பாருங்கள். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தவர், பெரிய கேப்பிறகு பிறகு தற்போது மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார்.
சாமானியன் என்ற படம் இவரின் நடிப்பில் வாயூரம் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்திற்காக தொடர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராமராஜன். அப்படி அவர் அளித்து வரும் பேட்டிகளில் அவரின் திரை வாழ்க்கை மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
பொண்ணுக்கு இருக்கும் பிரச்சனை
அவ்வாறு அவர் கொடுத்துள்ள பேட்டியில், தன் மகனுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் தன்னை மாடு தாத்தா என்றே அழைப்பதாக கூறி, அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்றும் வீடியோ காலில் பேசிக் வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து தனது மகள் குறித்து பேசியவர், அவருக்கு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளான பிறகும் அவருக்கு ஒரு குழந்தை இல்லை என்பதே எப்போதும் தனக்கு ஒரு வருத்தமாகவே உள்ளது எனக் குறிப்பிட்டு, அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் தன்னுடைய மனசு ரொம்பவே சந்தோஷம் அடைந்து விடும் என சற்று வருத்தமாகவே தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை நளினியை மணந்து கொண்ட ராமராஜனுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.