200 கிலோ வெள்ளி சிலை - நிறுவப்பட்ட ராம் லாலா சிலையின் சிறப்புக்கள் தெரியுமா..?
ராம் லாலா சிலை அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக பக்தர்களின் பெரும் முழக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.
அயோத்தி கோவில்
2020 ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கிய அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
கோவிலின் வெளிப்புற பணிகள் மீதமிருக்கும் நிலையிலும், ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ல் மாபெரும் அளவில் நடைபெறவுள்ளது.
இதற்கு முதற்கட்டமாக மைசூரை சேர்ந்த அருண் யோகி ராஜ் என்பவரால் கிருஷ்ண கல்லில் உருவாக்கப்பட்ட ராம் லாலா எனப்படும் குழந்தை ராமர் சிலை ஜனவரி 18-ஆம் தேதியான இன்று அயோத்தியில் கூர்மபீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுட்டுள்ளது.
நிறுவப்பட்ட ராம் லாலா சிலை....
சுமார் 200 கிலோ எடையுள்ள ராம் லாலா வெள்ளி சிலை கிரேனின் உதவியுடன் நேற்று(ஜனவரி 17) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் லாரியில் போலிசின் பலத்த பாதுகாப்புடனும், பக்தர்களின் ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் அயோத்தியை வந்தடைந்தது.
பின்னர் கிரேன் உதவியுடன் சிலை கருவறைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இன்று ராம் லாலா சிலை கூர்ம பீடத்தில் நிறுவப்பட்டதிலிருந்து பிராதண பிரதிஷ்டை நாள் வரை சடங்குகள் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.