அயோத்திக்கு சென்ற லாரியில் பயங்கர தீ - 3 மணி நேரமாக வெடித்து சிதறல்
அயோத்திக்கு பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீப்பிடித்த லாரி
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பரபரப்பு
இதற்கிடையில், ராமர் கோயில் திறப்பை ஏதோ அரசியல் நிகழ்வை போல பிரமதர் மோடி நடத்துவதாகவும், கும்பாபிஷேகத்தையும் புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு டன் கணக்கில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி திடீரென உன்னாவ் மாவட்டம் அருகே தீப்பிடித்தது. லாரியில் டன் கணக்கில் பட்டாசுகள் இருந்ததால் பல மணிநேரமாக பயங்கர சத்தத்துடன் அது வெடித்து சிதறியது. இதில் மொத்த லாரியின் பாகங்களும் அக்கு அக்காக கழண்டு காற்றில் பறந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதனால், மக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.