நள்ளிரவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Sexual harassment Crime Ramanathapuram
By Vidhya Senthil Jan 01, 2025 05:29 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இதனால் வழி தாங்க முடியாததால் கதறிக் கத்தியுள்ளார்.அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட அந்த மர்ப கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட மகன்.. துடிக்க துடிக்க அடித்து கொலை செய்த தந்தை - பகீர் சம்பவம்!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட மகன்.. துடிக்க துடிக்க அடித்து கொலை செய்த தந்தை - பகீர் சம்பவம்!

 அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி என்பது தெரியவந்தது.இதனையடுத்து அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

முன்னதாக கன்னியாகுமரியில் பாத்ரூம் சென்ற மாணவி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.