போராடிய மக்கள்; சாலைக்கு ‘நிர்மலா சீதாராமன்’ பெயர் - பலகையை அகற்றிய அதிகாரிகள்
சாலைக்கு நிர்மலா சீதாராமன் என வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
மேம்பால விவகாரம்
ராமநாதபுரம், லாந்தை கிராமத்திற்குச் செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் குருக்கே இருப்பதால், சுரங்கப்பாதை அமைத்து தரப்பட்டிருந்தது.
அந்த சுரங்கப்பாதையில் மலை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைகுடி, சின்ன தாமரைகுடி ஆகிய கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
நிர்மலா சீதாராமன் சாலை
எனவே, 10 ஆண்டு காலமாக சுரங்க பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த மாதம் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோளின் படி,
அந்த கிராமத்திற்கு ரூ 17 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தருவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்தார். அதனையடுத்து, இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் லாந்தை கிராம சாலைக்கு மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் பலகையை வைத்தனர்.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பெயர் பலகையை அகற்றினர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.