பிற்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட சாதி அர்ச்சகர்களுக்கு அவமதிப்பு - கொதித்தெழுந்த ராமதாஸ்

Dr. S. Ramadoss DMK
By Karthikraja Sep 19, 2024 07:25 AM GMT
Report

 பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு ஈட்டிய குத்தியுள்ளதாக ராமதாஸ் பேசியுள்ளார்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைமையகமான தைலாபுர தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார். 

pmk ramadoss latest press meet

இந்த சந்திப்பில் பேசிய ராமதாஸ், "அணைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் படி பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் அவமதிக்கப்படுவதாகவும், வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாமல் கோவிலின் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

நான் தான் கடவுள்; சாமி சிலை மீது ஏறி அமர்ந்த நபர் - அர்ச்சகர் பூஜை, ட்ரெண்டிங் சம்பவம்!

நான் தான் கடவுள்; சாமி சிலை மீது ஏறி அமர்ந்த நபர் - அர்ச்சகர் பூஜை, ட்ரெண்டிங் சம்பவம்!

பெரியார் நெஞ்சில் ஈட்டி

இந்த தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டிய அரசு அதை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அணைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர், "தங்களை அங்கு பரம்பரையாக பணியாற்றும் அர்ச்சகர்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும், எந்த கோவில்களில்பணியாற்ற நியமிக்கப்பட்டோமோ அங்கு பணி செய்ய விடாமல் ஆட்களே வராத கோவில்களுக்கு அனுப்பப்படுவதாக வேதனை தெறிவித்துள்ளனர். 

pmk ramadoss latest press meet

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் பரம்பரை அர்ச்சகர்களுடன் சேர்ந்து எங்களை அவமானப்படுத்தினர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் புகார் தெரிவித்தும் அதனால் எந்த பயனும் இல்லை என பாதிக்கப்பட்ட அணைத்து சாதி அர்ச்சகர்கள் புகார் அளித்துள்ளனர்.

அணைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டதாக இந்த திட்டத்தை தொடங்கி வாய்த்த ஸ்டாலின் பேசினார். ஆனால் இந்த அநீதி மூலம் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியுள்ளது திராவிட மாடல் அரசு.

ஒரே நாடு ஒரே தேர்தல்

மேலும் கிராம நிர்வாக அலுவலர்களை தேர்ந்தெடுக்கும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 15,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த கேள்விக்கு அதில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் ஐயங்கள் உள்ளது. மத்திய அரசு அதை தீர்த்து வைக்க வேண்டும்"என பேசியுள்ளார்.