நான் தான் கடவுள்; சாமி சிலை மீது ஏறி அமர்ந்த நபர் - அர்ச்சகர் பூஜை, ட்ரெண்டிங் சம்பவம்!
நான் தான் கடவுள் எனக் கூறிக்கொண்டு சாமி சிலை மீது ஏறி அமர்ந்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
நான் தான் கடவுள்
ஈரோடு, நகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோசலராமன். தீவிர பெருமாள் பக்தரான இவர் சமீபத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் 'கலியுக ரங்கநாதர்' கோயிலை கட்டியுள்ளார்.
இந்த கோவில் கருவறையில் ரங்கநாதர் ஐந்து தலை நாகம் மீது துயில் கொண்டிருக்கிறார். இங்கு அக்கம் பக்கத்தை சேர்ந்த கிராமத்தினர் பலர் வந்து செல்கின்றனர்.
வைரல் சம்பவம்
இந்நிலையில், அமாவாசையன்று வழக்கம்போல கலியுக ரங்கநாதருக்கு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த கோசலராமன் திடீரென ரங்கநாதர் சிலை மீது ஏறி அமர்ந்து நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டார்.
உடனே, அர்ச்சகர்களும் கோசலராமனுக்கு பால் ஊற்றி, பொட்டு வைத்து தீபம் ஏற்றி பூஜைகளை செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ படு வைரலானது. தற்போது இச்சம்பவம் பேசுப்பொருளாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.