‘நான் தான் உடைக்கச் சொன்னேன்...’ - அரசு சிலை தகர்ப்பு குறித்து பேசிய அன்னபூரணி

speech interview viral news annapoorni arasu amma
By Nandhini Dec 29, 2021 10:32 AM GMT
Report

அரசு சிலையை உடைத்தது தான், அன்னபூரணி அரசு அம்மா மீதான கடுமையான விமர்சனத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. அரசு இறந்த பிறகு, அன்னபூரணி வேறு ஒருவரை திருமணம் செய்ததாகவும், அந்த கணவர் தான் அரசு சிலையை உடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அரசு சிலை தகர்ப்பு குறித்து அன்னபூரணி அரசு அம்மா பேசியதாவது -

2 மாதத்திற்கு ஒரு முறை ஓட்டலில் தான் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். தொண்டாமுத்தூரில் எங்களுக்கான இடம் இருந்தும், அது புறநகரில் இருப்பதால், செங்கல்பட்டில் புதிதாக துவங்கலாம் என முடிவு எடுத்தேன். அந்த இடத்தை விற்க வேண்டும் என்று நினைத்தேன்.

சிலை இருப்பதால் அந்த இடத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இனி அங்கு நாம் செல்லப்போவது கிடையாது என்பதால், இனி அந்த சிலை தேவையில்லை என்பதால், நான் தான் அந்த சிலையை அகற்றச் சொன்னேன்.

அந்த இடத்தை விற்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. நானும், அரசும் தனித்தனி உடலாக இருக்கும் போது, அவ்வளவு அந்யோன்யமாக வாழ்ந்து வந்தோம். என்னோட மகளுக்கு கூட நான் தனி நேரம் ஒதுக்கக்கூட நேரம் இல்லை.

என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு தான் நான் நேரம் ஒதுக்க முடியும். எனக்கு சுயநலம் கிடையாது. சுயநலம் இருந்தால் ஆன்மிகத்தில் இருக்க முடியாது. ஸ்டீபன் 3வது கணவர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அவதாரம், நான் ஆதிபராசக்தி, நான் கடவுள் என நான் எங்கும் சொல்லவே இல்லை.

ஆன்மிகம் என்றால் என்ன என்பதை உணர வைக்க தான் நான் வந்தேன். நான் ஏதோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க இங்கு வரவில்லை. என்னுடைய வேலையை செய்ய தான் இங்கு வந்தேன். என்னைப் பற்றிய தவறான வீடியோக்களை அழித்து விடுங்கள்.

இவ்வாறு அன்னப்பூரணி பேசியுள்ளார்.