2026 தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம்

Dr. S. Ramadoss PMK BJP
By Sumathi Jun 09, 2025 05:00 AM GMT
Report

கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி? 

பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமித்ஷாவின் தமிழக வருகை தொடர்பான கேள்விக்கு, "நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பல பிரதமர்களோடு தொடர்பில் இருந்தவன்.

2026 தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம் | Ramadoss Hints At Alliance With Bjp

இப்போதைய பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனாலும் அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்; சசிகலாவுக்கு.. டிடிவி தினகரன் ஆவேசம்

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்; சசிகலாவுக்கு.. டிடிவி தினகரன் ஆவேசம்

ராமதாஸ் சூசகம்

இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

2026 தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம் | Ramadoss Hints At Alliance With Bjp

எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பேசியுள்ளதை சரி என ராமதாஸ் தெரிவித்துள்ளதால், திமுக - பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.