இதற்காகவே அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் - ராமதாஸ் சொன்ன பாய்ண்ட்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை தொடர்ந்து அந்த கட்சியின் வாக்குகளை கவர, பல கட்சிகளும் முயன்று வருகின்றன.
அதிமுக வாக்குகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமகவின் அன்புமணிக்காக பிரச்சாரம் செய்த போது, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பின்னால் இருந்த பேனரில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அவரும் அதிமுக, தேமுதிகவினர் பாமாவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார். அதனையே ராமதாஸ் தற்போது கூறியுள்ளார். தைலாப்புர இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மதுவிலக்கு அமல்படுத்த மாறுகிறது.
பாமகவிற்கு..
மக்கள் கள்ளக்குறிச்சி சாவுகளால் கொந்தளிப்பில் இருப்பதை தெரிந்தே திமுக அத்துமீறலில் ஈடுபட்டுகிறார்கள். அவர்களின் அத்துமீறலை முறியடித்து பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார். பாமக - அதிமுக நோக்கம் இடைத்தேர்தலில் ஒன்றாகவே இருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா திமுகவை தீய சக்தி என்றனர். அவர்களை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. ஆகையால், பாமகவிற்கு அதிமுகவினர் வாக்களிக்கவேண்டும்.
திமுக தோல்வியடைந்து விடும் என்பதால் தான் விக்கிரவாண்டியில் முதல்வர் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அவர் பிரச்சாரமே செய்தாலும் திமுக தோல்வி அடையும்.