22-இல் கும்பாபிஷேகம் - 700 ஆண்டுக்கு முன்னாடியே முடிவு பண்ணதா..? கணித ஆராய்ச்சியாளரின் தகவல்

Uttar Pradesh Ayodhya
By Karthick Jan 20, 2024 02:21 PM GMT
Report

வரும் 22-ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை குறித்து அடுத்தடுத்த கதைகள் தொடர்ந்து உலாவந்து கொண்டே உள்ளன.

700 ஆண்டுகளுக்கு முன்பே...

இந்நிலையில் தான், சமஸ்கிருத பாடல் ஒன்றை ஆராய்ச்சி செய்த போது அயோத்தி ராமர் கோயில் கும்பபிஷேக தேதி 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்ததுள்ளது என்று வேதசாஸ்திரயும் கணித ஆராய்ச்சியாளருமான முனைவர் என்.கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

ram-temple-opening-decided-before-700-years-news

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணித பேராசிரியாரகவும், தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழக்தில் வேத கலாச்சார துறைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கும் கண்ணன், சமஸ்கிருதம், வேத சாஸ்திரங்கள் மற்றும் கணித ஆராய்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளார்.

ram-temple-opening-decided-before-700-years-news

தேசிகர் எழுதிய 'ரகுவீர கத்யம்" எனும் சமஸ்கிருத காவியத்தின் பாடலை ஆராய்ந்த போது, அதில் மறைந்திருந்த நுட்பமான செய்தியை வெளிக்கொண்டு வந்திருப்பதாக குறிப்பிட்ட கண்ணன், தேசிகர் "கடபயாதி" என்னும் வேத எண் குறியீட்டை பயன்படுத்தி, கணித்திதன் உயர் கோட்பாடுகளை கவிதைகளில் படிப்பது மகிழ்ச்சியை தரும் என்று கூறினார்.

ராமர் கோவில் பிரசாத விவகாரம் - அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..காரணம் என்ன?

ராமர் கோவில் பிரசாத விவகாரம் - அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..காரணம் என்ன?

மகாவீர கத்யம்

ராமரை புகழ்ந்து தேசிகரால் எழுதப்பட்ட காவியம் தான் ரகுவீர கத்யம், இது மகாவீர கத்யம் என்ற அறியப்படுகிறது. இதில் ராமரின் வீரத்தையும், தர்மத்தையும் நிலை நிறுத்துவதை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ram-temple-opening-decided-before-700-years-news

இதில் தான் யுத்த காண்டத்தில் கணித குறியீடுகள் கொண்ட வரியை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட கண்ணன், அதனை விரிவுபடுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட போது ஸ்ரீராம பிரதிஷ்டை வருடமாகிய 2024 ஆம் ஆண்டு என மிக அற்புதமாக கணித முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

ram-temple-opening-decided-before-700-years-news

சாலிவாகன சக வருடம் 1945, மிருகசிரிஷ நட்சத்திரத்தின் அதிபதி தினத்தில், மகர மாதம், சோம வாரத்தில் (திங்கள் கிழமை),விக்கிரம வருடம் 2080, தை மாதம் 8 கலி வருடம் 5124, கொல்லம் வருடங்கள் முடிந்து 1198, என தற்போதைய ஜனவரி 22, 2024ல் கோயில் கட்டப்படும் என தேசிகர் குறிப்பிட்டுள்ளதை கண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.