''சமூகநீதியின் காவலர் ராமன் தான்''அமைச்சர் ரகுபதி சொன்ன கருத்து - திகைத்து நின்ற ஸ்டாலின்!
அயோத்திக்கு செல்வேன் என அமைச்சர் ரகுபதி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர மன்ற வளாகத்தில் கம்பன் கழகத்தின் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார் . அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,'
' டாக்டர் கலைஞருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றவர் சமூகநீதியின் காவலர் ராமன் தான். எல்லோரும் சமம் , சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து ,உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் ராமன் என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி அதற்கு எடுத்துக்காட்டையும் ஒன்றை தெரிவித்தார்.
தசரனது மகனாகத்தான் விபீஷினனையும், குகனையும், சுக்ரீவனையும் ராமன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார் அப்படியானால் , ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமா காவியம்” என தெரிவித்தார்.
சமூகநீதி காவலர் ராமன்
தொடர்ந்து பேசிய அவர், குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷனனோடு சேர்ந்து ஏழ்வரானோம்’ என்ற வரிகளை மேற்காட்டி கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சி ஒட்டிய கருத்துக்கள்,
திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார் என்பதைத் தான் நான் குறிப்பிட்டேன். மேலும் சமத்துவம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.