Monday, Apr 28, 2025

சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லையா? ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி!

Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami S. Regupathy
By Jiyath 10 months ago
Report

சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டசபையின் மூன்றாம் நாளான இன்றும் விஷச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேச வாய்ப்பு தரவில்லை எனக்கூறி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லையா? ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி! | Minister Raghupathi About Admk Edappadi Palanisamy

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி "இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து சட்டசபையை முடக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுகவினர் சட்டசபையில் அமளியில் ஈடுபடுகின்றனர்.

கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

கள்ளச்சாராயம் விற்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

சிபிஐ விசாரணை

அமளியில் ஈடுபட்டாலும் அவையில் தொடர்ந்து பங்கேற்க அதிமுகவினருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முதலமைச்சர் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லையா? ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி! | Minister Raghupathi About Admk Edappadi Palanisamy

தங்கள் தோல்வியை மறைக்க பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்கள் புறக்கணித்ததால் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்கின்றனர். திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.