அடடே... இப்படிதான் கற்றுக்கொண்டேன் - நடிகை காலில் முத்தம் கொடுத்த இயக்குநர்!

Viral Video Indian Actress
By Sumathi Dec 12, 2022 04:30 PM GMT
Report

இயக்குநர் நடிகையின் காலில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்ச்சை வீடியோ  

ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் டைரக்டர் ராம் கோபால் வர்மா. அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக உள்ளது.

அடடே... இப்படிதான் கற்றுக்கொண்டேன் - நடிகை காலில் முத்தம் கொடுத்த இயக்குநர்! | Ram Gopal Varma Responds To Viral Video With Ashu

இந்நிலையில் இவர் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல கண்டனங்களுக்கு ஆளானார்.

விளக்கம்

அதனைத் தொடர்ந்து இதற்கு ட்விட்டரில், விளக்கம் கொடுத்த ராம் கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து. நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது

அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.