லேட்டா குழந்தை பெத்துக்கணுமா? இதை செய்யலாம் - ராம்சரண் மனைவி சொன்ன ஐடியா!
குழந்தை பெற்றெடுப்பது குறித்து ராம் சரண் மனைவி யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
உபாசனா காமினேனி
நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி. இவர் மருத்துவர் மற்றும் சிஎஸ்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராக இருக்கிறார். குழந்தை குறித்து இவர் அளித்த பேட்டி ஒன்றில்,
“தாய்மை அடையும் முயற்சியை நான் ஒத்திவைக்க இருக்கிறேன். பொருளாதார பாதுகாப்பு நிலை ஏற்பட வேண்டும். அதனால் என்னுடைய கருமுட்டைகளை சேமித்து வைக்க விரும்புகிறேன்.
கருமுட்டை சேமிப்பு
பின்னாளில் தாய்மை அடைந்து கொள்ளலாம். நமக்கு போதுமான வளம் கிடைத்த பிறகு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். இது பெண்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
நான் என்னுடைய கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன். தன்னிறைவான வாழ்க்கைச் சூழலுக்கு வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நானும், ராம் சரணும் முடிவு செய்துள்ளோம் என்பதை பெருமையோடு சொல்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.