10 வருடங்களுக்கு பின்.. பிரபல நடிகரின் மனைவி கர்ப்பம் - வாழ்த்து மழையில் தம்பதி!
நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் சரண் - உபாசனா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு நடிகர் ராம் சரண் அறிமுகமானார்.
தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து, ஆரஞ்சு, ரச்சா, நாயக், ஏவடு போன்ற தெலுங்கு படங்களிலும், ஜன்சீர் என்ற ஹிந்தி படத்திலும் நடித்தார்.
வாழ்த்து மழை
இதற்கிடையில், 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய முதல் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இந்த தம்பதி.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022
இந்த செய்தியை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ராம் சரண் - உபாசனா ஜோடிக்கு அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ராம் சரண் இயக்குநர் சங்கருடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஆர்சி15’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.