போதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல நடிகையின் சகோதரர் - அதிரடி கைது!
போதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல நடிகையின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகையின் சகோதரர்
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி என இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவரது சகோதரர் அமன் பிரீத் சிங். தற்போது இவரை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் வெளியானது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
அதிரடி கைது
இதில், பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நரசிங்கியின் ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது,
அவர்களிடம் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகோயின், 2 பாஸ்போர்ட்கள், 2 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ரகுல் பிரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.