திருமணமாகி 3 மாசம் தான்...250 கோடி ரூபாய் கடன் - ஆபிஸை இழுத்து மூடிய ரகுல் கணவர்!!

Rakul Preet Singh Tamil Cinema Tamil Actress
By Karthick Jun 27, 2024 02:20 PM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் ஜாக்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரகுல் ப்ரீத் சிங்

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றவர் ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான "தடையற தாக்க" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

Rakul preet singh

அதனை தொடர்ந்து, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழை போலவே தெலுங்கு, ஹிந்தி என பல மொழி முன்னணி நாயகர்களுடன் நடித்து முடித்துள்ளார்.

250  கோடி கடன்

அண்மையில், இவருக்கு ஜாக்கி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. ஜாக்கி வாஷு பக்நானி என்ற பிரபல பாலிவுட் தயாரிப்பாளரின் மகன். பூஜா எண்டர்டேயின்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இவர்கள் படத்தை தயாரித்து வருகிறாரகள்.

நிச்சயமா கமலுக்காக நடிக்கல...ரொம்ப தலைக்கணம் இருக்கு!! போட்டுடைத்த ரகுல் ப்ரீத் சிங்

நிச்சயமா கமலுக்காக நடிக்கல...ரொம்ப தலைக்கணம் இருக்கு!! போட்டுடைத்த ரகுல் ப்ரீத் சிங்

அண்மையில் ஹிந்தியில் அக்ஷய் குமார், டைகர் ஷரப், பிரித்விராஜ் நடித்த "படே மியான் சொட்டே மியான்" என்ற படத்தை தயாரித்திருந்தார். படம் அதிரிபுதிரி தோல்வி. படம் பார்த்தவர்கள் தெறித்து துண்ட காணோம், துணிய காணோம் என ஓடிவிட்டார்கள்.

Rakul preet singh with husband jackky bagnani

இப்படியிருக்கும் சூழலில் தான் பெறும் பண நஷ்டம் என்ற காரணத்தால், தங்களது அலுவலகத்தை விற்கும் முடிவிற்கு அவர்கள் வந்துள்ளார்கள். முன்னதாக தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 80% ஊழியர்களை வெளியேற்றிய நிலையில் தற்போது ஆபிஸை விற்று உள்ளார் ஜாக்கி.