கல்யாணமாயிட்டா அத பத்தி தான் கேப்பீங்களா..? ஆணை கேட்பீர்களா இப்படி..? கடுப்பான ரகுல் ப்ரீத்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.
ரகுல் ப்ரீத் சிங்
இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றவர் ரகுல் ப்ரீத் சிங். அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது 31 வயதாகும் அவர், கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி என்பவருடன் காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் திருமணம் கடந்த 21-ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆண்களிடம் இதனை...
திருமணம் முடிந்த பிறகு போட்டோஷுட் புகைப்படங்களை ரகுல் பகிர, நெட்டிசன்கள் பலரும் திருமணமான பிறகு எதற்கு இம்மாதிரியான புகைப்படங்கள் என கமெண்ட் செய்தனர். இதற்கு ரகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் நிறுவன ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ரகுலிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, திருமணத்திற்கு பிறகு நீ இப்படித் தான் உடை அணிய வேண்டும் என ஒரு ஆணை கேட்பீர்களா?. இல்லை அல்லவா?. காலம் மாறிவிட்டது. தனக்கு பிடித்ததை தான் அனைவரும் செய்கிறார்கள் என்றார்.