விரைவில் டும்டும்டும்..! மலையாள பிரபலத்துடன் காதலில் விழுந்த ரஜிஷா விஜயன்..!
கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.
ரஜிஷா விஜயன்
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை துவங்கிய ரஜிஷா ''அனுராக கரிக்கின் வெல்லம்'' என்ற மலையாள படத்தில் திரையுலகில் அறிமுகமாகினார். முதல் படத்திலேயே கேரள மாநிலத்தின் சிறந்த நடிகை விருதை வென்றார்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜூன், லவ் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த ரஜிஷாவிற்கு தென்னிந்தியாவில் பெரும் புகழை ஜூன் படம் பெற்றுக்கொடுத்தது. ரஜிஷா, 2020-இல் தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணியில் வெளியான ’கர்ணன்’ படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.
கர்ணன் படமும் நல்ல வரவேற்பை பெற, பெரிதும் கவனிக்கப்பட்ட சூர்யாவின் "ஜெய்பீம்" படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ’சர்தார்’ படத்திலும் நடித்த ரஜிஷா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வரும் டோபின் தாமஸ் மற்றும் ரஜிஷா விஜயன் இருவரும் காதலித்து வருகின்றனர். ரகசியமாக இருந்த காதலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அது தற்போது வைரலாகி வருகின்றது.
காதலை அறிவித்துள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.