விஜய் வர்மாவுடன் இப்போ திருமண இல்லை.."ஆனாலும்..?"..வெளிப்படையாக சொன்ன தமன்னா
நடிகை தமன்னா தனது திருமணம் குறித்து அண்மையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
தமன்னா
2006-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா 20 ஆண்டுகளை நெருங்கியும் தற்போதும் தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகின்றார். தொடர்ந்து படங்கள், வெப் சீரியஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தற்போது இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாள மொழி படங்களில் பிஸியாகி இருக்கும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். காதலை அறிவித்துள்ள நிலையில், விரைவில் அவர் திருமண செய்து கொள்வார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
இப்போதைக்கு திருமணம் இல்லை
திருமணம் என்ற அமைப்பின் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் இருக்கிறேன் என தெரிவித்தார். ஆனால் இப்பொது அதற்கான மனநிலை தான் இல்லை என கூறிய அவர், நடிப்பு இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.

தொடர்ந்து நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் கூறி, அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதே போல, தற்போது படப்பிடிப்புதான் இப்போது தன்னுடைய மகிழ்வான இடம் என்றும் அதை அனுபவித்து வருவதாக தமன்னா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
கள்ளத்தோணி என்ற அடையாளத்தில் இன்றும் மலையக மக்களை அடக்க நினைக்கும் முதலாளித்துவச் சுரண்டல் IBC Tamil