நா பார்த்து வளர்ந்த பையன்...எனக்கு போட்டியா..? விஜய் மேடையில் போட்டுடைத்த ரஜினி..!
நீண்ட காலமாக ரஜினிகாந்த் - விஜய் இருவருக்குள்ளும் தொழில் ரீதியிலான போட்டி பயங்கரமாக நிகழ்வதாக விவாதிக்கப்படும் சூழலில், அது குறித்து ரஜினி நேற்று பேசியுள்ளார்.
லால் சலாம்
ரஜினி சிறப்பு தோற்றத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக, ஏ.ஆர்.ரகுமான் இசையில், 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் "லால் சலாம்".
வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில்,படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ரஜினிகாந்த் நீண்ட காலமாக விஜய்க்கும், தனக்கும் இருக்கும் போட்டி குறித்து பேசப்படுவதை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கின்றார்.
அவர் பேசும் போது, ஜெயிலர் ஆடியோ லான்சில் "கழுகு காக்கா கதை" தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விவாதம் ஆனதை நினைத்து வருந்துவதாக தெரிவித்தார்.
எனக்கு போட்டியா..?
ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் எனக்கு மரியாதை இல்லை என்றும் விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை என வெளிப்படையாகவே சொன்ன ரஜினிகாந்த், விஜய்க்கு போட்டி விஜய்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும்,என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன் விஜய் என்று குறிப்பிட்டு, 13, 14 வயசுல விஜய் தர்மத்தின் தலைவன் படம் ஷூட்டிங்கின் போது, சந்திரசேகர் விஜயை அறிமுகப்படுத்தி, "என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. நீங்க சொல்லுங்க. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்"ன்னு நீங்க சொல்லுங்க"னார் என்பதையும், அப்ப விஜய்ட்ட "நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாம்"னு சொன்னதையும் நினைவு கூர்ந்தார் ரஜினி.
அதுக்கப்பறம் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார் என்று கூறிய ரஜினி, நெக்ஸ்ட் அரசியல்... சமூகசேவைனு போக இருக்கார் என்றும் இதுல தனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா... ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தெரிவித்தார்.
மேலும், தயவு செஞ்சு ரெண்டு பேர் ஃபேன்ஸும் ஒப்பிடவேண்டாம். நிப்பாட்டுங்க, இது என்னுடைய அன்பான வேண்டுகோள் ரொம்ப நன்றி என்று வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார்.