"அப்பா சங்கி கிடையாது" - மேடையிலேயே சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக படம் பெருமைப்பட வைக்கும் எனக்கூறினார்.
சங்கி
சென்னையில் நேற்று ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள "லால் சலாம்" படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ' அப்பா(ரஜினிகாந்த்)'வை சங்கி'ன்னு சொல்லும்போது கோபம் வரும் என்று தெரிவித்து, இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று கூறினார்.
பெருமைப்பட..
ரஜினிகாந்த் ஒரு மனிதநேயவாதி என்று குறிப்பிட்ட ஐஸ்வர்யா, அவரைத் தவிர இப்படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், படம் பார்க்கும் ரசிகர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை ரஜினி ரசிகனாக இப்படம் பெருமைப்பட வைக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார். லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil