முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி - இணையத்தில் கிளம்பும் கேள்விகள்!
முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், நடிகர் ரஜினி ஜெயிலர் படம் பார்க்கவுள்ளார்.
ஜெயிலர்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இதில், டிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். முன்னதாக வெளியான ‛காவலா’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
முதல்வருடன் திரைப்படம்
இதற்கிடையில், ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். தொடர்ந்து, ஜார்கண்ட் ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், திடீரென உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு சென்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பேசுப்பொருளாகியுள்ளது.
ரஜினிகாந்த் எதற்காக யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்கிறார்? இந்த சந்திப்பு என்பது திரைப்படத்துக்கானதா? இல்லாவிட்டால் பின்னணியில் அரசியல் சார்ந்த விஷயங்கள் உள்ளதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.