ஜெயிலர் படம் எப்படி இருக்கு? - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!
நாளை ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமயலை புறப்பட்டு சென்றார்.
நாளை வெளியாகும் ஜெயிலர் திரைப்படம்
ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் என பலர் நடித்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள "ஜெயிலர்" படம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு முன்பதிவு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த்
வழக்கமாக தனது திரைப்படம் முடிந்த பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் இமயமலை செல்லவில்லை.
இந்த நிலையில் நாளை ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று இமயமலை புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
படம் எப்படி இருக்கு?
அவர் புறப்பட்டுச் செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 வருடங்களாக கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இமயமலை செல்லவில்லை. இந்த வருடம் தற்போது இமயமலை செல்ல உள்ளேன் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் நீங்கள் நடித்த ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு என்று கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதில் அளித்த அவர், படம் எப்படி இருக்கிறது என நான் கூறினால் நன்றாக இருக்காது. அதனை நீங்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும் என்று கூறினார்