இலங்கையில் இருந்து ரஜினிக்கு வந்த அங்கீகாரம்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Rajinikanth
By Karthick Jun 17, 2024 01:32 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டை முன்னிட்டு வெளியான முதல் நினைவு முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் மட்டுமே நாயகனாக நடித்தாலும், இந்தியாவை தாண்டி ரஜினியின் புகழ் பெரும் உச்சத்தில் உள்ளது. தமிழ் திரைப்படம் வெளிநாடுகளில் தற்போது எங்கு வெளியாகினாலும் அந்த மார்க்கெட்டை முதலில் உருவாக்கியவர் ரஜினி தான்.

rajinikanth

அவ்வளவு ஏன் இந்தியா மொழி படங்கள் தற்போது ஜப்பானில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை குவிக்கிறது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நம்ப சூப்பர்ஸ்டார் தான்.

திடீரென ரசிகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் ரஜினிகாந்த்? பின்னணி என்ன

திடீரென ரசிகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் ரஜினிகாந்த்? பின்னணி என்ன

பாலிவுட் படங்கள் அங்கு வெளியாக காரணமும் அவரே.

கௌரவம்

இப்படி உலகம் முழுக்க அறிமுகமான திரை நட்சத்திரமாக மின்னும் நடிகர் ரஜினிக்கு பல்வேறு மரியாதைகளும், கௌரவங்களும் வெளிநாடுகளில் இருந்து தேடி வருகின்றது. அப்படி ஒன்று தான் இலங்கையில் இருந்து அவருக்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200-வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

rajinikanth srilanka emblem

இதற்காக பெரிய ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. அதற்காக நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் நினைவு முத்திரையை அமைப்பின் நிர்வாகி ரஜினியை நேரில் சந்தித்து அவருக்கு அளித்து கௌரவித்துள்ளார்.