திடீரென ரசிகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் ரஜினிகாந்த்? பின்னணி என்ன
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா மட்டுமின்றி உலகளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தும் ரஜினியின் திரை பயணம் இன்னும் சுறுசுறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
90-களின் இறுதியில் இருந்தே ரஜினி மீது அரசியல் பேச்சுக்கள் அதிகளவில் பேசப்பட்டு வந்தன. சில ஆண்டுகள் முன்பு அவரும் தனி கட்சி துவங்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.
ஆனால், அவரின் உடல்நிலையை குறிப்பிட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் காரணமாக, ரஜினி அரசியலில் இருந்து முழுவதுமாக விலகினார். ஆனால், ரஜினி ரசிகர்களிடம் நல்ல உறவை தற்போதும் நீடிக்கிறார். பட விழாக்களில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ரஜினி.
Fans meet
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், ரஜினி விரைவில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார் என கருத்துக்கள் தீவிரமாக பரவின. இது குறித்த whatsapp செய்து ஒன்று தீயாய் பரவியது.
பலரும் இதனை உண்மை என்றே கருதினார்கள். ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல் என ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்த தகவலை வாட்ஸப் பில் பகிர்ந்ததார். இதுபோன்ற தகவலை பதிவிடும் முன் நம்பகத்தன்மையை உறுதி செய்யுங்கள். தலைவரின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற தகவலை பகிர வேண்டாம்.