நீங்கள் கடவுளின் குழந்தை - ரஜினியின் மகள்கள் உருக்கம்!

Rajinikanth Only Kollywood Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Sumathi Aug 16, 2022 10:23 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் 47 ஆண்டுகள் நிறைவுசெய்ததை ஒட்டி அவரது மகள்கள் இருவரும் உருக்கமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 ரஜினியிஸம்

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் ரஜினி, சாதாரண பஸ் கண்டக்டராகா இருந்த இவர் சினிமாவிற்கு முதல் முதலில் 1975இல் அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குனர் பாலச்சந்திரன் மூலம் திரை உலக்கில் தடம் பதித்தார்.

நீங்கள் கடவுளின் குழந்தை - ரஜினியின் மகள்கள் உருக்கம்! | Rajinikanth S Daughter Aishwarya On Rajinism

ஆங்கிலேயர்கள் தமிழக மக்களின் மனதில் வெள்ளை நிறம்தான் அழகு என்று பதித்துச்சென்றதை பொய்யென உடைத்து காட்டியவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் நடித்த படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த இவர், பைரவி என்னும் படத்தில்தான் முதன்முதலில் ஹீரோவாக நடித்தார்.

47 ஆண்டுகள் நிறைவு

அதையடுத்து அவருடைய சொந்த ஸ்டைலில் தொடர்ந்து படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தமிழில் மட்டும் இல்லாமல் இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழியிலும் நடித்துள்ளார்.

இத்தகைய திறமையும் ஆற்றலும் மிக்க ரஜினி தன்னுடைய சினிமா வாழ்வில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக இவருக்கு பலரிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

மகள்கள் உருக்கம்

இந்நிலையில் இவரது மகள்களான ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் ட்விட்டரில் இவருக்கு அன்பான, உருக்கமான வாழ்த்து பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில் சௌந்தர்யா கூறியதாவது, 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது.

நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. love you thalaivaaa என்று கூறி அவரது புதிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

மூத்த மகளான ஐஸ்வர்யா கூறியதாவது, 47 ஆண்டுகள் ரஜினியிஸம்.., கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு! இவரின் மகளாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன். #prouddaughter என்று கூறி அவருடன் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.