விடாப்பிடியாக அடம்பிடித்த மீனா - வேண்டாம்.. என மறுத்த ரஜினிகாந்த்!
நடிகை மீனா குறித்த சுவாரஸ்ய தகவலை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
படையப்பா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடித்த படையப்பா படம் செம ஹிட் அடித்தது. இதனை கே.எஸ். ரவிகுமார் இயக்கியிருந்தார்.
அந்த படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். முன்னதாக மீனா 40 நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்துக்கொண்டு ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், மீனாவின் ஸ்டோரி சென்ஸ் நல்லா இருக்கு என்பதால் அவரிடம் படையப்பா கதையை சொன்னேன். கதையை கேட்டதும் அந்த நீலாம்பரி கேரக்டர் நான் பண்றேன் என்றார் மீனா. அது இன்னசன்ட் ஃபேஸ். அது ஒரு வில்லி கதாபாத்திரம். அது சரிபட்டு வராதுனு சொன்னாலும் விட மாட்டேங்குறாங்க.
ரஜினி தகவல்
நீங்க வேண்டுமானால் இன்னொரு கேரக்டர் இருக்குல அது பண்ணுங்க, சவுந்தர்யா பண்ண கேரக்டர்ல நடிக்கச் சொன்னா அது வேண்டாம் என்றாங்க. நான் நீலாம்பரியாகத் தான் நடிப்பேன் என்றார். என்னால மீனாவை கன்வின்ஸ் பண்ண முடியல. அப்புறம் ரவிகுமார் வந்து பேசி, இது செட்டாகாதுனு சொன்னார்.
அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டர் பண்ணாங்க.
அந்த கேரக்டர் கொடுக்கலனு மீனாவுக்கு இப்ப கூட என் மீது அந்த கோபம் இருக்கு. அவர் ஒரு நல்ல ஃப்ரெண்ட், அழகான மனிதர் எனத் தெரிவித்துள்ளார்.