ரஜினி முத்தக்காட்சியில் நடிக்காத காரணமே இதுதான் - நீண்டநாள் ரகசியம் உடைத்த பிரபலம்!
முத்தக்காட்சியில் ரஜினி நடிக்காதது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி
சினிமா நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ரஜினி குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ரஜினிகாந்த் 170 படம் நடித்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் முத்தக்காட்சியில் நடிக்கவில்லை.

அதற்கு என்ன காரணம் என்றால் மக்கள் மத்தியில் தான் நல்ல நடிகர் என பெயர் எடுக்க வேண்டும் என்றால், அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது என்று அவருக்கு தெரியும். முதல் முதலில் தன்னை வைத்து படம் தயாரித்த 14 தயாரிப்பாளருக்கு படம் செய்து கொடுத்து முழு லாபத்தையும் தந்து இருக்கிறார்.
முத்தக்காட்சி
அந்த மனித பன்பு மிக்கவர். நானும் அவருடன் மூன்று படங்கள் மேல் நடித்து இருக்கிறேன். தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பார்.

பிரபு, கார்த்தி மார்க்கெட் இழந்த போது, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார். எந்தவிதமான கிசுகிசு வந்தாலும் அதை எல்லாம் தாண்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார் " எனத் தெரிவித்துள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil