சசிகலாவை சந்தித்த பிறகு ரஜினி சொன்ன அரசியல் கருத்து - சந்திப்பின் பின்னணி..?

Rajinikanth J Jayalalithaa V. K. Sasikala
By Karthick Feb 25, 2024 03:57 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார்.

ரஜினி - சசிகலா

சென்னை ஆழ்வார்பேட்டையில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவருமே தங்கியுள்ளனர்.

rajinikanth-meets-sasikala-in-her-house

நேற்றைய தினம், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் நெருங்கிய தோழியும் முன்னாள் அதிமுகவின் பொதுச்செயலாளருமான சசிகலா புதிதாக அதே பகுதியில் தான் கட்டியுள்ள வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினர்.

அதிமுக மோதல் திமுகவிற்கு சாதகமில்லை; ஓபிஎஸ் என்னை சந்திப்பார் - சசிகலா திட்டவட்டம்

அதிமுக மோதல் திமுகவிற்கு சாதகமில்லை; ஓபிஎஸ் என்னை சந்திப்பார் - சசிகலா திட்டவட்டம்

அரசியல் பற்றி

அதனை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, வீடு கோவில் மாதிரி உள்ளது என்று கூறி, இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

rajinikanth-meets-sasikala-in-her-house

மேலும், அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்து சென்றார் ரஜினிகாந்த். திடீரென சசிகலாவை ரஜினிகாந்த் சந்தித்துள்ளது தமிழக அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.