நண்பனின் இறுதிசடங்கில் கூட கலந்துக்கொள்ளாத ரஜினி - ரகுவரன் அம்மா ஷாக் காரணம்!
ரகுவரனின் இறுதிச் சடங்கில் ரஜினி கலந்துக்கொள்ளாத காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரகுவரன்
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் நம்மை மிரட்டியவர் நடிகர் ரகுவரன். ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1982 முதல் 2008ம் ஆண்டுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் பாட்ஷா, காதலன், அருணாச்சலம், லவ் டுடே, முகவரி, ஆஹா, அமர்க்களம் ஆகிய படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
இறுதிச் சடங்கு
இந்நிலையில், யாரடி நீ மோகினி படத்திற்குப் பின் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரகுவரனின் இறப்புச் செய்தி வெளியாகி கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சியில் தள்ளியது.
இந்நிலையில், ரகுவரனின் அம்மா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஒன்றில் உயிர் நண்பனின் மறைவிற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை. ஆனால் உண்மையில் ரகுவரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நேராக சென்று பார்த்துள்ளார்.
தீவிர சிகிச்சை அளித்து வந்த நேரத்தில் நீண்ட நேரம் அங்கேயே இருந்துள்ளார். ரஜினி, ரகுவரனின் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காரணம், இப்படி ஒரு நண்பனை, மகா கலைஞனை அந்த நிலையில் தன்னால் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் தான் போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.