ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு; ஆனால் அவர் சாகும்போது.. - ரகுவரன் தம்பி பகீர் தகவல்!
நடிகர் ரகுவரன் குறித்த தகவல்களை அவரது தம்பி பகிர்ந்துள்ளார்.
ரகுவரன்
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் நம்மை மிரட்டியவர் நடிகர் ரகுவரன். ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1982 முதல் 2008ம் ஆண்டுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் பாட்ஷா, காதலன், அருணாச்சலம், லவ் டுடே, முகவரி, ஆஹா, அமர்க்களம் ஆகிய படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
இறப்பு
இந்நிலையில், யாரடி நீ மோகினி படத்திற்குப் பின் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரகுவரனின் இறப்புச் செய்தி வெளியாகி கோலிவுட் சினிமாவையே அதிர்ச்சியில் தள்ளியது. தற்போது இவரது தம்பி சமீபத்திய பேட்டி ஒன்றில், ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ள நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் மட்டும் ரகுவரன் இடம் ரிஷி ஒப்படைக்கப்படுவார்.
அந்த இரண்டு நாட்களும் சினிமாவில் சூட்டிங் எதுவும் ரகுவரன் வைத்துக் கொள்ள மாட்டார். தனது மகனுடன் அந்த நாட்களை சந்தோஷமாக செலவிட்டார். அதன் பின்பு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்தார். ஒரு காலத்தில் குடிக்கு மிகவும் அடிமையாகி இருந்தார்.
ஆனால் இறக்கும் சமயத்தில் மதுப்பழக்கத்தை சுத்தமாக விட்டு விட்டார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. முதலுதவி அளித்து மருத்துவமனைக்குச் அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.