ரகுவரன் இருந்திருந்தால் மிகவும் நேசித்திருப்பார் - சோகத்தில் நடிகை ரோஹினி

Raghuvaran Rohini
By Irumporai 3 நாட்கள் முன்

“ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார்” என நடிகை ரோஹினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரகுவரன்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் நம்மை மிரட்டியவர் நடிகர் ரகுவரன், கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது நினைவுநாளையொட்டி அவரது முன்னாள் மனைவி ரோஹினி தனது ட்விட்டர் பக்கத்தில்.

ரகுவரன் இருந்திருந்தால் மிகவும் நேசித்திருப்பார் - சோகத்தில் நடிகை ரோஹினி | Rohini Tweet Over Raghuvaran Death

ட்விட்டர் பதிவு

மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத்தான் தொடங்கியது. ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் அது மாற்றியது.

ரகு இப்போது இருந்திருந்தால், சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார்; ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.