விவாகரத்துக்கு பின் மீண்டும் கர்ப்பமான நடிகர் ரஜினியின் மகள்..!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Thahir 1 மாதம் முன்
100 Shares

ரஜினிகாந்தின் 2வது மகள் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும் அவருக்கு குடும்பத்தினர் மத்தியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த மகள் விவாகரத்து 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Dhanush

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர்.

அவர்களின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

2-வது மகள் கர்ப்பம் 

ரஜினியின் 2வது மகளான சௌந்தர்யா கடந்த 2010 ஆம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் விசாகன் வணங்காமுடி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு விசாகன் வீட்டில் சௌந்தர்யாவிற்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth

விசாகன்-சௌந்தர்யா தம்பதியருக்கு அக்டோபர் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளதாக மருத்துவர்கள் தேதி கொடுத்துள்ளனர்.

ஐஸ்வர்யா - தனுஷ் பிரிவால் மனவேதனையில் இருந்து வரும் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.