தனுஷை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா... ஆண் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth
By Thahir 3 மாதங்கள் முன்

நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஐஸ்வர்யா பதிவேற்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம்  - பிரிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனுஷை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா... ஆண் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு | Birthday Wishes For Boyfriend

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். 

இவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா திரைப்பட தயாரிப்பில் இறங்கினார். 

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து 

பயணி என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்.மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது கணவர் தனுஷை பிரிந்ததற்கு பின்பு தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா.

தனுஷை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா... ஆண் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு | Birthday Wishes For Boyfriend

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வொர்க் அவுட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவப்போது பதிவேற்றி வருகிறார்.

இதனிடையே தனது நண்பர் சுரேஷ்குமார் என்பவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் தனது நண்பர் சுரேஷ்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது உண்மையான அமைதியான நண்பர். 47 வயதாகவும் இவர் என்னுடன் 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார். என அவர் தெரிவித்துள்ளார்.