ரஜினிகாந்த், லதாவை இப்படித்தான் திருமணம் செய்தார் - பரவும் தகவல்!

Rajinikanth Marriage Latha Rajinikanth
By Sumathi Dec 12, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு பரிட்சயமானவர். கடந்த 1981ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

rajinikanth with wife

லதா ரஜினிகாந்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நான் முதலில் அவரை கல்லூரியில் தான் பார்த்தேன். என் கல்லூரி இதழுக்காக அவரை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

என்னில் ஒரு பாதி அவர்; அதை நம்பவே முடியல - உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

என்னில் ஒரு பாதி அவர்; அதை நம்பவே முடியல - உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

திருமணம்

பின்னர் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஊன்றுதல் என் மனதில் தோன்றியது. நான் அவரை நேர்காணல் எடுக்க வேண்டும் என மகேந்திரன் மனைவி சுதாவிடம் கேட்டேன். அவர் மகேந்திராவிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாக கூறினார்.

rajinikanth family

இரண்டு முறை தவறிய நிலையில் மூன்றாவது முறையாக அவரை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் போயஸ் கார்டன் இல்லம் கிரகப்பிரவேசத்திற்கு என்னை அழைத்தார். இதுதான் எங்கள் முதல் சந்திப்பு எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று நடிகர் ரஜினி விழா ஒன்றில் பேசுகையில், எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு திருமணம் நடக்க காரணமானவர் ஒய்.ஜி மகேந்திரன். எனக்கு இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது மனைவிதான் எனத் தெரிவித்துள்ளார்.