அவர்களை கண்டு நடுங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அலர்ஜியான அந்த 5 விஷயங்கள்..!

Rajinikanth Tamil Cinema
By Thahir Aug 02, 2023 07:18 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்திற்கு அந்த 5 விஷயங்கள் என்றால் கடும் அலர்ஜி என்று தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Rajinikanth was shocked to see them

படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த விஷயங்கள் என்றால் அலர்ஜி 

இதனிடையே ரஜினிகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் சில விஷயங்களை கண்டு கூச்சப்படும் பயப்பட்டும் இருந்திருக்கிறார். அவர் கண்டு அஞ்சி நடுங்கிய அந்த அலர்ஜியான விஷயங்களை தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் மீடியாவை பார்த்தாலே என்ன பேசணும் என்று தெரியாத நிலையில், முக்கால்வாசி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே மாட்டாராம். அப்படி சந்திக்க வந்தாலும் தவிர்த்து விடுவாராம்.

Rajinikanth was shocked to see them

மேலும் மேடைகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்பு நின்று பேசுவது என்றால் அவர் பதற்றத்துடனும், நடுக்கத்துடனும் படபடப்பாகவும் இருப்பாராம்.

ஏன் என்றால் என்ன பேசணும் எப்படி பேசணும் என்று இவருக்கு தெரியாததால் இதை நினைத்து பல நேரங்களில் சிரமப்பட்டு இருந்துள்ளாராம்.

மேக்கப் என்றால் எரிச்சல் 

மேலும் இவருக்கு மேடைகளில் ஏறினாலே பயம் வந்துவிடுமாம். அப்படி மேடையில் ஏறினால் கை, கால் எல்லாம் நடுங்கி விடுமாம்.

படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகளில் சக நடிகர்களை அடிப்பது போல் காட்சி இருந்தாலே மனத்திற்குள் பதற்றத்துடன் கை, கால்கள் எல்லாம் உதறிவிடுமாம்.

Rajinikanth was shocked to see them

மேலும் இவருக்கு மேக்கப் என்றால் கடும் அலர்ஜியாம். குறிப்பாக மேக்கப் போட்டுக் கொண்டு நீண்ட நேரம் இருப்பது அலர்ஜியை உண்டாக்குமாம்.

மேக்கப் என்றாலே இவருக்கு எரிச்சல் தான் ஏற்படுமாம். இவர் நடிகராக வளர்ந்து வந்த காலங்களில் பல அவஸ்தைகளை கடந்த வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.