என் மாப்பிள்ளை என்பதற்காக சொல்லல.. தனுஷ் அப்படித்தான் - ரஜினி ஓபன்டாக்!
தனுஷ் குறித்து ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது.
ரஜினி 50
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது 50வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக அடுத்த ஆண்டில்,
லோகேஷ் கனகராஜின் கூலி மற்றும் நெல்சனின் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி அமெரிக்காவுக்குச் சென்று, முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனுஷ்க்கு பாராட்டு
இந்நிலையில், முன்னதாக காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனுஷ் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று தற்போது பரவி வருகிறது. அதில், “தனுஷ் உண்மையிலேயே ரொம்ப நல்ல மனிதர். என்னுடைய மருமகன் என்பதற்காகச் சொல்லவில்லை.
அவரை நினைத்து நான் ரொம்பவும் பெருமைப்படுகின்றேன். அருமையான பையன், தங்கமான பையன். அப்பா அம்மாவை மதிக்கின்றார். அப்பா அம்மாவை தெய்வமாக பார்க்கின்றார்.
பொண்டாட்டியை நல்லா பாத்துக்குறாங்க. தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் உள்ளார். நல்ல மாப்பிள்ளையாகவும் உள்ளார். நல்ல டேலண்டேட்” எனத் தெரிவித்துள்ளார்.